Flash News

NEW DELHI: Home minister Shivraj Patil resigned on Sunday, saying he felt obliged to take "moral responsibility" for the brutal Islamist attacks in Home minister Shivraj Patil gestures as he addresses mediapersons after a cabinet meeting with Prime Minister Manmohan Singh in New Delhi on Thursday.

 
powered_by.png, 1 kB

Home
Govt. wins trust vote stories(T) PDF Print E-mail
Written by Administrator   
Wednesday, 23 July 2008

வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256
Imageடெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மின்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 487 வாக்குகளே பதிவாயின. இதில் அரசுக்கு ஆதரவாக 253 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என ஓட்டளித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஓடி வந்து பிரதமருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
மீதமுள்ள சுமார் 54 எம்பிக்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தனர். இவர்களது வாக்குகளும் எண்ணப்பட்டபோது ஒட்டு மொத்தத்தில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாயின. மொத்தம் 10 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என ஓட்டளித்தனர்.

முன்னதாக பிரதமர் பேசிய பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், பிரதமர் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டார், பேசவில்லை.இதையடுத்து ஓட்டெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என சபாநாயகர் அறிவிக்க ஆதரிப்போர் ஆம் என்றும், எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் தந்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வாக்களிக்குமாறு எம்பிக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்ததால் ஓட்டெடுப்பு தாமதமானது. ஒருவழியாக 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. இறுதி முடிவு வெளியாக இரவு 8.25 மணியாகிவிட்டது.

மொத்தம் 541 வாக்குகள் பதிவாயின.

அணி மாறிய எம்பிக்களை நீக்க பாஜக முடிவு:
டெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்பி்க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்தக் கட்சி சபாநாயகரிடம் கடிதம் தந்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த சோமாபாய் பட்டேல், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரஜ்பூஷண் சரண்சிங் ஆகிய அந்த 2 எம்.பிக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பாஜக சார்பில் சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது.

மேலும் கட்சி மாறி வாக்களித்த 5 பாஜக எம்பிக்களையும் நீக்க அந்தக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. அதே போல காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்த 2 தெலுங்கு தேசம், 2 ஐக்கிய ஜனதாளம், 1 பிஜூ ஜனதாதளம், 1 மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதே போல கட்சி மாறி வாக்களித்த சிரோமணி அகாலிதளம் எம்பிக்கும் அந்தக் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்து.

 


அத்வானி 10 கோடி தந்தார் என்றால் நம்புவீர்களா?-அமர்சி்ங்
டெல்லி: பாஜக எம்பிக்கள் உள்பட நான் யாருக்கும் பணம் தரவில்லை.. யாரும் பணம் தர முயற்சிக்கவும் இல்லை என சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் பணம் தந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் பாஜக எம்பிக்கள். மேலும் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலின் அவர்கள் பெயரையும் இழுத்துள்ளனர்.

நான் தான் பணம் தந்தேன் என்பதை அவர்கள் நிரூபிக்கட்டும். இதை ஒரு தொலைக்காட்சி ரகசியமாக படம் பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். அதைக் காட்ட வேண்டியது தானே. இதோ நானும் ஒரு 10 கோடி கரன்சி கட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து இதை அத்வானி தந்தார் என்று சொல்கிறேன். அதை ஏற்பீர்களா?

முதலில் இவர்களது விலை ரூ. 40 கோடி, ரூ. 50 கோடி என்றார்கள். இப்போது எப்படி அவர்களது விலை திடீரென ரூ. 1 கோடியாகிப் போனது. பாஜக எம்பிக்களின் விலை ஏன் இப்படி இறங்கிப் போனது? அந்தப் பணக் கட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது.. அதில் உள்ள கைரேகைகளை சோதனை செய்யட்டும்.

நான் இந்த விஷயத்தில் எந்த விசாரணைக்கும் தயார். புரளியைக் கிளப்புவதில் பாஜகவுக்கு ஈடு இணை யாராவது உண்டா என்றார் அமர்சிங்.

விசாரணைக்கு தயார்-அகமத் படேல்:

சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல் கூறுகையில்,
என் வாழ்வில் முதல் முறையாக எனது பெயரை ஒரு மட்டமான குற்றச்சாட்டில் இழுத்துவிட்டுள்ளனர். நான் யாருடனும் பணம் தொடர்பாக பேசவில்லை.

நான் தவறு செய்திருந்தாக நம்பினால் என் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். நான் அதற்குத் தயார் என்றார்.

 

இது அத்வானியின் 'டர்ட்டி டிரிக்ஸ்'-காங். தாக்கு!
டெல்லி: தங்களுக்கு சமாஜ்வாடி கட்சி பணம் தந்ததாக பாஜக எம்பிக்கள் கூறியிருப்பது அத்வானியின் 'டர்ட்டி டிரிக்ஸ்'களில் ஒன்று என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங்கும், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலும் பணம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

மேலும் அதில் அட்வான்சாக தரப்பட்ட பணம் என்று சொல்லி சுமார் ரூ. 1 கோடியை சபாநாயகர் முன் பாஜக எம்.பிக்கள் கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இத்தகைய சம்பவம் நடந்ததால் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஆனால், இதை பாஜக தலைவர் அத்வானியும், அவரது டர்ட்டி டிரிக்ஸ் (Dirty tricks) ஆலோசகர்களும் இணைந்து நடத்திய நாடகம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அரசு வெல்லப் போகிறது என்பதை உணர்ந்தவுடன், இந்த வெற்றி பணத்தால் கிடைத்தது என்பது போன்ற பிரமையை உருவாக்கவே இந்த நாடகத்தை அத்வானி நடத்தியுள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

இந்தப் பணத்தின் மூலத்தை கண்டுபிடித்தால், குற்றவாளிகளைப் பிடித்துவிடலாம். எனவே முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றார்.

மேலும் ஒரு அரசின் பெயரைக் கெடுப்பதற்காக நாடாளுமன்றத்தின் புனிதத்தையே கூட கெடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்ட அத்வானியை நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை தடுப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்பதை அறிந்ததும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் அத்வானி. இது மிக துரதிர்ஷ்டவசமானது. ஒரு முக்கிய கட்சியின் மூத்த தலைவர் இந்தச் செயலில் ஈடுபட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், நம்பி்க்கை வாக்கெடுப்பில் ஜெயித்துவிடுவோம் என பயத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர் குலைக்க வேண்டும் என்ற எண்ண்ததுடன் இந்த நாடகத்தை பாஜக நடத்தியது என்றார்.

சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல் கூறுகையில்,  தோல்வி பயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காகவே இத்தகைய தந்திரத்தில் பாஜக ஈடுபட்டது. அதில் என் பெயரையும் இழுத்துள்ளனர். எம்.பிக்களிடம் பேரம் பேசியதாக யாராவது நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்தே விலகிவிடுகிறேன் என்றார்.

சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையி்ல்,

அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக நடத்திய இந்த மட்டமான செயலால் செயல்களால் நாடாளுமன்றத்தின் புனிதத்தையே அந்தக் கட்சி கெடுத்துவிட்டது.

அதிகாரத்துக்கா எந்த அளவுக்கும் செல்பவர்கள் தான் பாஜகவினர். அதை மீண்டும் உதாரணத்துடன் நிரூபித்துவிட்டனர்.

பாஜக பற்றி என்னிடம் ஏராளமான ரகசியங்கள் உள்ளன. என்னை கொலை செய்யக் கூட முயற்சித்தனர். கடவுள் அருளால் நான் தப்பினேன். இந்தியாவுக்கு அவமரியாதையை தேடித்தந்து விட்ட இவர்களுக்கு மக்கள் தகுந்த தண்டனை தருவார்கள் என்றார்.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில்,

யாராவது பணம் தந்திருந்தால் அதை போலீசில் போய் அல்லவா சொல்லியிருக்க வேண்டும். நானோ அல்லது சமாஜ்வாடி கட்சியின் பிரமுகரோ அவர்களுடைய வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்திருந்தால் போலீசில் புகார் செய்து கைது செய்து இருக்கலாமே?.

அல்லது சபாநாயகரிடமாவது புகார் சொல்லி பணத்தையும் அவரிடம் ஒப்படைத்திருந்தால் இவர்கள் சொல்வதை யாராவது கொஞ்சமாவது நம்புவார்கள்.

பணத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் கொட்டி பாஜகவினரின் செயலுக்கு மன்னிப்பே கிடையாது. அந்த 3 பாஜக எம்பிக்கள் மீதும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவேன் என்றார்.

 

13 எம்.பிக்கள் 'கட்சி மாறி' வாக்களித்ததால் தப்பிய மன்மோகன் அரசு
டெல்லி: பல்வேறு கட்சிகளின் 13 எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் அணி மாறி வாக்களித்ததால், மன்மோகன் சிங் அரசு தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

நேற்று லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுக்களும், எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. முதலில் 272 வாக்குகள் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால் கூடுதலாக 3 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். எதிர்த் தரப்பை விட கூடுதலாக 19 வாக்குகள் கிடைத்து வெற்றியும் கிடைத்துள்ளது.

அரசுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகளில் 13 பேர் எதிர் அணிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களால்தான் அரசு வெல்ல முடிந்தது.  தங்களது கட்சி கொறடா உத்தரவை மீறி இவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்களில் அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் இருப்பது பாஜக. இது அந்தக் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 7 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளனர்.

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாளம் ஆகிய கட்சிகளிலிருந்து தலா 2 பேரும், பிஜூ ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து தலா ஒருவரும் மாறி வாக்களித்துள்ளனர்.

இவர்கள் தவிர மதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செஞ்சிராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இது போதாதென்று 9 எம்.பிக்கள் நடுநிலை வகித்துள்ளனர். அவர்களில் 4 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், பாஜகவின் புண்ணியத்தால் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

 
< Prev   Next >

Cinema Gallery

  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery
  • Cinema Gallery

Polls

Mumbai attacks: Who is responsible?
 

Travel Guide

Get the Flash Player to see this player.
Flash Image Rotator Module by Joomlashack.
UAE
Image 2 Title
Image 3 Title
Image 4 Title
Image 5 Title

Who's Online

We have 10 guests online

© 2010 DeeVista.com
deevista.com is just for you...